குற்றியலுகர ஈற்று மரப்பெயர்ப் புணர்ச்சி

குற்றியலுகர ஈற்றனவாகிய (அகக்காழனவாகிய) மரப்பெயர் களும்
(புறக்காழனவாகிய) புற்பெயர்களும் அம்முச்சாரியை பெற்று வன்கணத்தொடு
புணரும்.
எ-டு : தேக்கு + அம் + கோடு, செதிள் தோல், பூ = தேக்கங் கோடு,
தேக்கஞ் செதிள், தேக்கந்தோல், தேக்கம் பூ; கமுகு + அம் + காய் =
கமுகங்காய்; சீழ்கு + அம் + புல் = சீழ்கம்புல்; கம்பு + அம் + புலம்
= கம்பம் புலம்; பயறு + அம் + காய் = பயற்றங்காய்.
(தொ. எ. 415 நச்).
மரப்பெயர்களுள் ஈற்றயல் எழுத்தாகிய மெல்லொற்று வல்லொற்றாகத்
திரியாத மரப்பெயர்களும், திரியும் மரப் பெயர்களும் உள.
எ-டு : புன்கு + அம் + கோடு = புன்கங்கோடு;குருந்து + அம் +
கோடு = குருந்தங்கோடு – மெல்லொற்று வல் லொற்று ஆகாதன.
வேம்பு + அம் + கோடு = வேப்பங்கோடு; கடம்பு + அம் + காய் =
கடப்பங்காய்; ஈஞ்சு + அம் + குலை = ஈச்சங்குலை – இவை மெல்லொற்று
வல்லொற்றாகத் திரிந்தன. (416 நச்.)