அவ்வழிப்புணர்ச்சிக்கண், வன்தொடர்க்குற்றியலுகர ஈற்றின் முன்
வருமொழி வன்கணம் வரின் மிகும்; ஏனைத் தொடர்க் குற்றியலுகர ஈறுகள்
இயல்பாகப் புணரும்.
எ-டு : பாக்குக் கடிது; நாடு சிறிது, எஃகு தீது, வரகு பெரிது,
வந்து போனான், எய்து பொருள்.
வேற்றுமைப் புணர்ச்சிக்கண், இடைத்தொடர் – ஆய்தத் தொடர் – இடையில்
ஒற்று மிகப் பெறாத நெடில் தொடர் -இடையில் ஒற்று மிகாத உயிர்த்தொடர் –
என்னும் இக்குற்றிய லுகர ஈறுகள் வன்கணம் வரின் மிகா.
எ-டு : மார்பு கடுமை, எஃகு சிறுமை, நாகு தீமை, அரசு
பெருமை
டு று – இறுதியாகிய நெடில்தொடரும் உயிர்த்தொடரும் நிலை மொழியாக
நிற்ப, வருமொழிமுதல் வன்கணம் வரின், நிலைமொழி ட் ற் என்பன இடையில்
மிக, வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும்; பிறகணம் வரினும் இரட்டுதல்
கொள்க.
எ-டு : யா
ட்டுக் கால், பா
ற்றுச் சிறை; முர
ட்டு மனிதன், வயி
ற்றிடை
இப்புணர்ச்சி பெரும்பான்மையும் வேற்றுமைக்கண்ணது. ‘முரட்டு
மனிதன்’: அல்வழி முடிபு.
சில மென்தொடர்க் குற்றுகரங்கள் வேற்றுமைப் புணர்ச்சி யில்
வன்தொடர்க் குற்றுகரங்கள் ஆகும்.
எ-டு : மருந்து + பை = மருத்துப்பை; கன்று + ஆ = கற்றா
சில மென்தொடர்க் குற்றியலுகரங்கள் புணர்ச்சிக்கண் ஐகார ஈற்றனவாம்.
வன்தொடராய்த் திரிந்து ஈற்று ஐகாரம் பெறுவனவுமுள.
எ-டு : பண்டு + காலம் = பண்
டைக்காலம்; இன்று + நாள் =
இற்
றைநாள்.
திசைப்பெயர்கள் ஈற்றுக் குற்றியலுகரம், பிறதிசைப்பெயரும் ஏனைய
பெயரும் வருமொழியாக நிகழுமிடத்து, தான் ஏறிய மெய்யொடு கெட, ஈற்றயல்
ககர ஒற்றுக் கெட்டும், றகரம் னகரமாகவும் லகரமாகவும் திரிந்தும்,
பிறவாறும் புணரும்.
எ-டு : வடக்கு + கிழக்கு, மேற்கு, சேரி = வடகிழக்கு, வட மேற்கு,
வடசேரி; தெற்கு + கிழக்கு, மேற்கு, சேரி = தென்கிழக்கு, தென்மேற்கு,
தென்சேரி; மேற்கு + காற்று, ஊர் = மேல்காற்று, மேலூர்; கிழக்கு +
காற்று, சேரி = கீழ்காற்று, கீழைச்சேரி; மேற்கு + சேரி =
மேலைச்சேரி.
தெங்கு என்ற நிலைமொழிமுன் ‘காய்’ வரின், நிலைமொழி முதலெழுத்து
நீண்டு ஈற்றுயிர்மெய் கெட்டுத் தேங்காய் என முடியும். (இடையே
அம்சாரியை பெற்றுத் தெங்கங்காய் என முடிதலுமுண்டு). (நன். 181 –
187)