குற்றியலுகர ஈறு முன்னிலை வினைக்கண் வாராமை

முன்னிலை ஏவலொருமை வினைக்கண் குற்றியலுகர ஈறு வாராது. வாராதெனவே,
முன்னிலை ஏவலொருமைக்கண் வரும் கு சு டு து பு று ஈறுகள்
முற்றியலுகரமாகவே ஒலிக்கப் படும். எ-டு : முறுக்கு, பரசு, கட்டு,
கத்து, எழுப்பு, தீற்று (தொ. எ. 152 நச். உரை)