நெடில், குறிலிணை, குறில்நெடில், நெட்டொற்று, குறி லிணையொற்று,குறில்நெடிலொற்று, குற்றொற்று இவற்றை யடுத்து வரும் வல்லெழுத்தேறியஆறு உகரங்களும் குற்றிய லுகரமாம். குற்றியலுகரம் புள்ளி பெறும்.எ-டு : நாடு, வரகு, வடாது, பாக்கு, அரக்கு, பனாட்டு,கட்டு.இவ்வாறு குற்றியலுகரத்தைக் கணக்கிடுவது ஒரு மரபு.(யா. க. 2 உரை)இதன்கண் பிண்ணாக்கு, சுண்ணாம்பு, பட்டாங்கு, விளை யாட்டு, போவது,வருவது, ஒன்பது முதலியன பல அடங்கா என்பது சூத்திரவிருத்தியில்விளக்கப்பட்டது.