‘தன்முக மாகத் தானழைப் பதுவே’ (நன். 303) – இதில் ‘அழைப்பது’
குற்றுகரமொழி; அதனோடு ஏகார இடைச் சொல் வந்து ‘அழைப்பதே’ என முடிய
வேண்டியது வகர உடம்படுமெய் பெற்று ‘அழைப்பதுவே’ என நின்றது. ‘ஆறன்
ஒருமைக்கு அதுவும் ஆதுவும்’ (நன். 300) – இதன்கண் ‘ஆது’ குற்றுகரமொழி;
அதனோடு உம் என்னும் இடைச்சொல் வந்து ‘ஆதும்’ என் முடிய வேண்டியது, வகர
உடம்படுமெய் பெற்று ‘ஆதுவும்’ என நின்றது. (நன். 164 இராமா.)