தனிநெடில், குறிலிணை, குறில்நெடில், நெடிலொற்று, குறிலிணை
ஒற்று, குறில்நெடிலொற்று, குற்றொற்று என்ற ஏழு அசைகளையும் அடுத்து க்
ச் ட் த் ப் ற் என்ற ஆறு மெய் களையும் ஊர்ந்து குற்றியலுகரம் வரவே,
அதன் எண்ணிக்கை (7
X 6 =) 42 ஆகும் என்ப. இங்ஙனம்
வகுத்த வரையறையில், பிண்ணாக்கு – சுண்ணாம்பு – பட்டாங்கு – விளையாட்டு
– இறும்பூது முதலியன அடங்கா. அவற்றுள்ளே, ணாக்கு – ணாம்பு – டாங்கு –
யாட்டு என்பனவற்றை நெடிலொற்றிறுதி எனவும், பூது என்பதனை நெடிலிறுதி
எனவும் கொண்டு, இவற்றின்கண் வரும் குற்றியலுகரம் என்று கொள்ளினும்,
போவது – வருவது – ஒன்பது – என்பது – முதலியன இப்பகுதியில் அடங்கா.
ஆதலின் குற்றியலுகரத்தை அதன்முன் நிற்கும் அசைகள் பற்றி 42 என்று
கணக்கிடல் சாலாது.(நன். 94 சங்கர.)