குற்றியலுகரம் இடவேற்றுமை பற்றி அறுவகைப்படும் என்பது

நெட்டெழுத்து ஏழு, ஆய்தம் ஒன்று, இடையிறுதிகளில் வாராத ஒளகாரம்
நீங்கலாக உயிர் பதினொன்று, வல்லெழுத்து ஆறு, மெல்லெழுத்து ஆறு,
வல்லெழுத்துக்களொடு தொட ராத வகரம் நீங்கலாக இடையெழுத்து ஐந்து – ஆகிய
இவற்றை அடுத்து வரும் குற்றியலுகரம், ஈற்றயலெழுத்தை நோக்கிக் கணக்கிட
(7+1+11+6+6+5) முப்பத்தாறாம்; இடத்தை நோக்க, நெடில் – ஆய்தம் – உயிர்
– வலி – மெலி – இடை – என்னும் இவற்றை அடுத்து வருதலின் அறுவகைப்படும்.
(நன். 94 சிவஞா).