சேறு + கால் – சேற்றுக்கால் – நேர்பு நேர்; நாணு + தளை – நாணுத்தளை- நேர்புநிரை; நெருப்பு + சினம் – நெருப்புச்சினம் – நிரைபுநிரை; கனவு+ கொல் – கனவுக்கொல் – நிரைபுநேர் இவை இருவகை உகரமும் சந்தியில்ஒற்றடுத்து வந்தன.தோன்றிநின்ற ஒற்றுக்களே அன்றி, நிலைமொழியில் ஒற்று மிக்கு உண்ணும்நடக்கும் என வருவனவும், விக்குள் கடவுள் என வருவனவும் போல்வன தேமாபுளிமாவாகவே நிற்கும்; உரியசைகள் ஆகா. (தொ. செய். 10 நச்.)