‘குற்றியலுகரமும் அற்று’

குற்றியலுகரமும் மெய்யீறு போல உயிரேற இடங்கொடுக்கும். (தொ. எ.
106 இள., 105 நச். உரை)
குற்றியலுகரமும் மெய்யீறு போல ஈற்றில் வருவழிப் புள்ளி பெறும்.
(பேரா., சூ. வி., எ. கு., எ.ஆ.)
குற்றியலுகரமும் மெய்யீறு போலப் புள்ளி பெறும். புள்ளி பெறுதல்
மாத்திரை செம்பாதியாதலைக் குறிப்பதாகலா னும், குற்றியலுகரம்
புள்ளிபெறுதல் ‘முப்பாற் புள்ளி’ என்ற தொடராலேயே புலனாவதாகலானும்,
மொழிமுதற்கண் வரும் குற்றுகரம் புள்ளி பெறாது என்பது ஆசிரியர்
கருத்தாகாது.