குற்றியலுகரப் பொதுப்புணர்ச்சி

நிலைமொழியீற்றின்கண் குற்றியலுகரம் நிற்க வருமொழி முதலில் உயிர்
வருமாயின், குற்றியலுகரம் தான் ஏறிநின்ற மெய்யை விடுத்துத் தான்
கெடும்; சிறுபான்மை கெடாது நின்று உடம்படுமெய் பெற்றுப் புணரும்.
எ-டு : நாகு + அரிது
> நாக் + அரிது = நாகரிது;
அழைப்பது + ஏ
> அழைப்பது +
வ் + ஏ = அழைப்பதுவே (நன். 303);
ஆது + உம்
> ஆது +
வ் + உம் = ஆதுவும் (நன். 300)
(நன். 164)