குற்றியலுகரப் புணரியல்

இது தொல்காப்பிய எழுத்துப்படலத்தின் ஒன்பதாவதாகிய இறுதி இயல்.
உகரம் குறுகி வரும் இடங்கள், ஈரொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகரங்கள்,
தொடர்மொழியில் வரும் உகரம், பலவகைக் குற்றியலுகர ஈற்றுச் சொற்களின்
வேற்றுமை – அல்வழி – என்ற இரு நிலையிலும் நிகழும் புணர்ச்சிகள்,
சுட்டுப்பெயர் வினாப்பெயர் நிறைப்பெயர் அளவுப்பெயர் இவற்றின்
புணர்ச்சிகள், விரிவான முறையில் எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி,
புள்ளிமயங்கியலில் ஒழிந்து நின்ற செய்யுள்முடிபுகள்,
புணரியல்நிலையிடைப் பகுத்துக் காணாது உள்ளபடியே கொள்ளத்தக்க தொடர்கள்,
எழுத்ததிகாரப் புறனடை – என்பன குற்றியலுகரப் புணரிய லுள்
காணப்படுகின்றன. (தொ. எ. 406 – 483 நச்.)