குற்றியலுகரத்தை அசைக்குஉறுப்பாக்கியமை

செய்யுள் என்பது பலசொற்கள் இணைந்து அமைவது ஆகலானும், அல்வழிவேற்றுமைத் தொடர்களில் நிலை மொழியீற்றுக் குற்றியலுகரம்முற்றியலுகரமாக நிறைந்து ஒலிப்பதானும், குற்றுகரத்தையும்முற்றுகரத்தையும் கொண்ட இயற்கைச் சொற்களும் ஈறு மிகுந்த முதனிலைத்தொழிற் பெயர்களும் பலவாக இருத்தலானும், அவ்வுகரங் களின் ஒலிமொழியீற்றில் வரும்போது ஏனைய உயிர்மெய்க் குறிலொலியினின்று சிறிதுவேறுபடுதலானும், தமிழில் அசைபிரித்துக் காண்டல் பெரும்பாலும் பொருளைஅடிப் படையாகக் கொண்டே அமைதலானும் குற்றியலுகரம் அசைக்குஉறுப்பாக்கப்பட்டது.குற்றியலுகரம் தொடர்மொழிக்கண்ணும் ஒரு மொழிக் கண்ணும்முற்றியலுகரமாக நிறைந்து ஒலியாக்கால்,‘வேற்றார் அகலம் உழுமே ஒருகோடுமாற்றார் மதில்திறக்கு மால்’ (முத்தொள் 19.)‘பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர’ (முத்தொள் 22)‘முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாக’ (முத்தொள் 27)‘கூந்தல்மாக் கொன்று குடமாடிக் கோவலனாய்’(முத்தொள் 38)என்னுமிடங்களில் செப்பலோசை கெட்டுப் பாவும் அழியும்.‘இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழைதொன்று சுண்ணத்தின் தோன்றிய வேறுபாடுஒன்றெ னாவிக்கொர் கூற்ற மெனநையாநின்று நீலக்கண் நித்திலம் சிந்தினாள்’ (சீவக.903)என்ற செய்யுளில் இன்று, தொன்று, நின்று என்னும் சொற்க ளிலுள்ளஈற்றுக் குற்றியலுகரம் ‘ஒன்றெ’ என்னும் சீரிலுள்ள எகர ஈறுபோல ஒருமாத்திரை அளவினதாய் ஒலித்தல் வேண்டும். (இலக். கட். அசை. பக். 47)