நிலைமொழி குற்றியலுகர ஈற்றதாக வருமொழி முதலில் யகரம் வரின், உகரம்
கெடக் குற்றியலிகரம் பெற்றுப் புணரும்.
இயல்பான முற்றியலிகரச் சொல் முன்னரும் யகரம் வந்து புணரும்.
கொக்கு நாடு குறும்பு என்பன முதலான குற்றியலுகர ஈற்றுச்சொற்களும்,
கொக்கி நாடி குறும்பி என்பன முதலான முற்றியலிகர ஈற்றுச் சொற்களும்,
கொக்கியாது – நாடியாது -குறும்பியாது என்றே புணரும். நிலைமொழியீறு கி
டி பி எனக் குற்றியலிகரம் ஆகியவழி, நிலைமொழிகள் கொக்கு நாடு குறும்பு
என்பன; கி டி பி முற்றியலிகரம் ஆகியவழி நிலை மொழிகள் கொக்கி நாடி
குறும்பி என்பன. (குறும்பு பாலைநிலத்தூர்; குறும்பி – புற்றம்
பழஞ்சோறு)