குற்றியலிகரம்

நிலைமொழி ஈறு குற்றியலுகரமாக விருக்க வருமொழி முதலில் யகரம் வரின்குற்றியலுகரம் குற்றியலிகரமாம். கேண்மியா, சென்மியா முதலிய முன்னிலைஏவல் வினை களின் ஈற்றில் வரும் ‘மியா’ என்ற அசைச்சொல்லில் மகரத்தைஊர்ந்து வரும் இகரமும் குற்றியலிகரமாம். குற்றியலிகரம்புள்ளிபெறும்.நாகியாது, வரகியாது, வடாதியாது, பாக்கியாது, அரக்கி யாது,பனாட்டியாது, கட்டியாது, கேண்மியா என்றாற் போல வரும்.சீரும் தளையும் சிதையுமிடத்துக் குற்றியலிகரம் அலகு பெறாது.எ-டு : குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர் – குறள் 66குற்றியலிகரம் அலகு பெறவில்லை; அலகு பெற்றால் தளை சிதைந்துநிரையொன்று ஆசிரியத்தளை ஆகிவிடும். (யா. க. 2 உரை)