ஒருமாத்திரை பெற்ற இகரம் தன் மாத்திரை குறைந்து அரையாக ஒலிப்பது
குற்றியலிகரமாம். வருமொழி முதலில் யகரம் வர, நிலைமொழி ஈற்றில்
நிற்கும் குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ் விகரம்
குற்றியலிகரமாம். மியா என்னும் முன்னிலை அசைச்சொல்லின் மகரத்தை
ஊர்ந்து நின்ற இகரமும் தன் மாத்திரையில் குறைந்தொலிக்கும்
குற்றியலிகரமாம். ஈற்றுக் குற்றியலுகரம் 36 ஆதலின் அவ் வகையால்
வருவனவும், அசைச்சொல் மியாவின்கண் வருவதும் என இவ்வாறு குற்றியலிகரம்
37 ஆமாறு காண்க. (நன். 93)