நாகு யாது – என்ற தொடரில், கு ஒரு மாத்திரை பெற்ற முற்றியலுகரம்.
அது கெட, அதனிடத்து இகரம் வந்து ஒலி குன்றி அரைமாத்திரை அளவிற்றாய
குற்றியலிகரம் ஆகும். ஆகவே, குற்றியலுகரமே குற்றியலிகரமாகத் திரியும்
என்று நன்னூல் முதலியன கூறும் செய்தி தொல்காப்பியனார் கருத்தன்று.
குற்றியலிகரம் ஒருமொழிக்கண்ணும் தொடர்மொழிக் கண்ணும் வரும்.
ஒருமொழிக்கண் முன்னிலை அசைச்சொல் லாகிய மியா என்பதன் மகரத்தை ஊர்ந்து
வரும் இகரம் குற்றியலிகரமாம்.
குற்றியலுகரம் இருமொழிக்கண் இடையே வருமிடத்து முற்றியலுகரமாம்.
நிலைமொழியீற்று உகரம் கெட, அவ் விடத்து நாகு + யாது = நா
கியாது எனக் குற்றியலிகரம்
வரும். (தொ. எ. 409, 411 இள.)
குற்றியலிகரம் செய்யுளில் மெய் போல அலகு பெறாது; மெய் அளபெடுத்தல்
போல் அளபெடுக்காது. குற்றியலிகரத்துக்கும் முற்றியலிகரத்துக்கும்
இடையே பொருள் வேறுபாடுண்டு. அவ்வேறுபாட்டைக் கற்போர் எளிதாக
உணரவேண்டிக் குற்றியலிகரத்தின் மேல் புள்ளியிட்டுக் காட்டுப.
நாடி
)யாது, கொக்கி
)யாது, குறும்பி
)யாது –
குற்றியலிகரம்
நாடி யாது, கொக்கி யாது, குறும்பி யாது – முற்றியலிகரம் (எ. ஆ.
பக். 89) (செய். 4 நச். உரை)