குற்றியலிகரம் முதலியன தமிழ்ச்சிறப்பெழுத்து ஆதல்

இங்கு (பெருங்காயம்), ஏது தாது என்பன குற்றியலுகர ஈறு போல
இருப்பினும், அவை வடசொல்லாதலின் முற்றியலுகர ஈற்றனவே, குற்றியலுகர
ஈற்றன அல்ல என்க. எனவே, குற்றிய லுகரம் திரிந்து குற்றியலிகரம் ஆதலும்
வடமொழிக்கண் இல்லை. ஆய்தம் தமிழ்ச்சிறப்பெழுத்து என்பது வெளிப்படை.
ஆகவே, குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற மூன்றும் வடமொழிக்கண்
காணப்படாத, தமிழிற்கே உரிய சிறப்பெழுத் துக்களாம். (சூ. வி. பக்.
28)