குற்றியலிகரம் சொற்கள் புணர்ந்தியலும் நிலைமைக்கண் தனக்குரிய அரை
மாத்திரையினும் குறுகி ஒலித்தற்கும் உரியது; குறுகி ஒலியாமையே
பெரும்பான்மை என்க.
எ-டு : ஆடு+யாது= ஆடியாது; கவடு + யாது = கவடி யாது; தொண்டு+
யாது = தொண்டியாது – ஈண்டுக் குற்றியலிகரம் குறுகி ஒலித்தன.
தெள்கு + யாது = தெள்கியாது; நாகு+ யாது = நாகியாது – ஈண்டுக்
குற்றியலிகரம் குறுகாது அரை மாத்திரையே ஒலித்தன.
முன்னவை குறுகும் என்றற்கும் பின்னவை குறுகா என்றற்கும் காரணம்
வருமாறு: ஆடி (திங்கள்), கவடி (வெள்வரகு), தொண்டி (ஊர்) என்னும்
(முற்றியல்) இகர ஈற்றுப் பெயர்கள் யாது என்னும் வருமொழியொடு
புணருமிடத்து, ஆடியாது – கவடியாது – தொண்டியாது – என வரும். ஆதலின்,
ஆடு+யாது = ஆ
டியாது. கவடு + யாது= கவ
டியாது, தொண்டு + யாது =
தொண்
டியாது – என வரும்
இவ்விருதிறத்திற்கும் வேற்றுமை புலப்பட வேண்டி, குற்றியலுகரம் கெட
ஆண்டுத் தோன்றும் ஆடி – கவடி – தொண்டி – என்னும் குற்றியலிகரத்தின்
மாத்திரை அரையினும் குறுகிக் காலாக ஒலிக்க வேண்டுவ தாயிற்று. திங்கட்
பெயராகிய ஆடி முதலியவற்றது இயல்பு இகர ஈற்றினை ஒரு மாத்திரையளவிற்கு
இசைத்தல் வேண்டும்.
இனித் தெள்
கியாது – நா
கியாது – என்பவை குறுகாமைக்குக்
காரணம், தெள்கி – நாகி – என்பன இயற்பெயர்கள் ஆகாமை யால் நிலைமொழி
தெள்கு – நாகு – என ஐயமின்றி உணரப் படும் ஆதலின், அவை அரை
மாத்திரையாகவே குறையாது ஒலிக்கும் என்றவாறு. (தொ.எ.35. ச.
பால.)