தளையும் சீரும் வண்ணமும் கெடாத இடங்களில் குற்றிய லிகரமும்குற்றியலுகரமும் உயிரளபெடையும் அலகு பெறும்; அவை மூன்றும் கெடவரின்அலகு பெறா.எ-டு:‘குழலினி தியாழினி தென்பதம் மக்கள்’ (குறள்-66)‘அருளல்ல தியாதெனின் கொல்லாமை கோறல்’ (குறள் -254)இவ்வெண்பா அடிகளில், இரண்டாம் சீரின் முதற்கண் உள்ள குற்றியலிகரம்அலகு பெற்றால், முறையே நிரை யொன்றாசிரியத் தளையும் கலித்தளையும் தட்டுவெண்பா அடிசிதையும் ஆதலின், இன்னோரன்ன இடங்களில் குற்றியலிகரம்அலகுபெறாது.‘குன்’று, கோ, டு, நீ, டு குருதிபாயவும் – ஆறசைச்சீர்எனைப்பல எமக்,குத்,தண்,டா, து’ – ஐந்தசைச்சீர்இவ்வடிகளில் குற்றியலுகரம் அலகுபெறின், முறையே ஆறசைச்சீரும்ஐயசைச்சீரும் வந்து செய்யுளடி சிதையுமாத லின், குற்றியலுகரம்அலகுபெறாது என விலக்க, மூவசைச் சீராய் வரும்.‘உப்போஒ எனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற்(கு)’‘பிண்ணாக்கோஒ என்னும் பிணாவின் முகத்திரண்டு’முதலடியில் அளபெடை அலகு பெற்றால் வெண்பாவில் கலித்தளை வந்துதட்டும். அடுத்த அடியில் அளபெடை அலகு பெற்றால் வெண்பாவில் நாலசைச்சீர்புகுந்துவிடும். ஆதலின் இன்ன இடங்களில் அளபெடை அலகு பெறாது.‘வந்துநீ சேரின் உயிர்வாழும் வாராக்கால்முந்தியாய் பெய்த வளைகழலும்’இவ்வடிகளில் முறையே குற்றியலுகரமும் குற்றியலிகரமும் வெண்பாயாப்புக் கெடாமையால் அலகுபெற்றன.கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் (குறள் 1087)என்னும் வெண்பா அடியில் அளபெடை அலகு பெற்றது.செறாஅஅய் வாழியென் நெஞ்சு (குறள் 1200)என்னும் வெண்பா அடியில் அளபெடை ஈரலகு பெறவே,செறா, அ, அய்- நிரைநேர்நேர் ஆயிற்று.அலகுபெறுமிடத்துக் குற்றிகர குற்றுகரங்களைக் குற் றெழுத்தே போலக்கொண்டு அலகிடல் வேண்டும்.தனிநிலை அளபெடை நேர்நேர் இயற்று; ஆஅ-நேர்நேர்இறுதிநிலை அளபெடை நிரைநேர் இயற்று; படாஅ-நிரைநேர்பரவை (-உலகியல்) வழக்கினுள் பண்டமாற்றும், நாவல் கூறலும், அவலமும்,அழுகையும், பூசலிடுதலும், முறையிடுத லும் முதலாக உடையவற்றுள்அளபெழுந்த மொழிகள் செய்யுளகத்து வந்து உச்சரிக்கும்பொழுது அளபெடாஎன்பது இலக்கணம் இன்மையின், அவை செய்யுளகத்து வருவழித் தளைசீர் வண்ணம்கெடநின்றால் அலகு பெறா எனவும், அவை கெடாவழி அலகுபெறும் எனவும் கொள்ளப்படும்.‘நறுமாலை தாராய் திரையவோஒ என்னும்’என்புழித் திரை ய வோ ஒ – அளபெடையை நீக்கி, நிரைநேர் நேர் எனப்புளிமாங்காயாகக் கோடல் நேரிது;அளபெடையை நீக்கித் திரை யவோ – கருவிளம்என்று கோடலும் ஒன்று.ஒருவனது இயற்பெயரைச் சார்த்தி அளபெடை வருதல் எழுத்தானந்தம் என்னும்குற்றமாதலின், அளபெடையை நீக்கி விடுதலே முறையாகும். (யா. க. 4.உரை)