கேண்மியா, வரகு என்பனவற்றின் இகரமும் உகரமும், ‘போலும்’ என்புழி
அரைமாத்திரையாய் நின்ற மகரம் ‘போன்ம்’ என லகரம் னகரமாய்த் திரிந்து
ஈரொற்றுடன் நின்ற காரணத்தால் பின்னர்க் கால்மாத்திரையாய் நின்றாற்போல,
முன்னர் ஒருமாத்திரையாய் நின்று பின்னர் ஒரு காரணம் பற்றி அரைமாத்திரை
ஆகாமல், மகரமும் வல்லெழுத்துமாகிய மெய்யினைச் சார்ந்து என்றும்
அரைமாத்திரையாயே நிற்கும் ஒரு தன்மைய ஆயினும், அப்பெற்றி உணராது, இவை
அரை மாத்திரை பெறுதல் மகரக்குறுக்கம் போலச் செயற்கையால் போலும் என்று
உலகம் மலையாமைப் பொருட்டு, இவை இங்ஙனம் ஆதல் இயல்பு என்பார்,
குற்றிகரம் குற்றுகரம் என்றொழியாது, குற்றியலிகரம் குற்றியலுகரம்
என்று குறியிட்டார்.
‘இகரம் குறுகும்’, (தொ. எ. 410) ‘உகரம் குறுகிடன்’ (எ. 406) என்ற
தொடர்களுக்கு, இகரம் அணுகும் (வந்து பொருந்தும்), உகரம் வந்து
பொருந்தும் இடன் – என்பனவே பொருள். (சூ. வி. பக். 27)