சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாது சந்தனக் கோலே ஆமாறு
போல, உயிரின் குறுக்கமும் உயிரேயாம் எனினும், புணர்ச்சி
வேற்றுமையானும், பொருள் வேற்றுமை யானும், சீரும் தளையும்
சிதையுமிடத்து அலகு பெறாமை யானும், குற்றியலிகர குற்றியலுகரங்கள்
சார்பெழுத்து என உயிரின் வேறாயின. (இ.வி. 16)