முன்மொழிக்கு இன்றியமையாப் பொருத்தம் பத்தும் இயற் பெயரிடத்துநன்மையைப் பயக்கும் எழுத்தும் சொல்லும் பொருளும் உணர்ந்து நுட்பத்தால்புலவன் உரைத்த அகலக் கவியைக் கொடை முதலிய வரிசை செய்து புனைந்தோர்,“பெரிய புகழானும் உருவத்தானும் முறையே நிறைமதியும் இளஞாயிறும் இவராம்”எனச் சிறப்புற்று இவ்வுலகில் புகழுடம்பான் நிலைபெற்றுத் தலைமைஎய்தியிருப்பர்.‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி,எய்துப’ (புறநா.27) என்றதனால் இருமைப்பய னும் எய்துவர் என்பது. (இ.வி. பாட். 180)