முதற்கண் நிறுவிய பொருள்களைவிடக் குறைந்த எண் ணிக்கையுடையபொருள்களைப் பின்னர் நிறுவுவது.எ-டு : ‘யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித்தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே’அடிதோறும் மூன்று பொருள்களை நிறுவுங்கால் ஓரடியில் இரண்டே பொருளைநிறுவியமை குறைஎண் நிரல் நிறை என்பர் ஒரு சாரார். (யா. வி. பக்.384)