குறை ஈற்றுப் பலபொருள் இரட்டை

பலவாறு பொருள் பெற்று நான்காக அடுக்கிவரும் சொல் ஈற்றில்ஓரெழுத்துக் குறைந்து வருவது.எ-டு : ‘ஓடையே ஓடையே ஓடையே ஒடை’இதன்கண், ஈற்றுச்சீர் இறுதியெழுத்தொன்று குறைந்து வந்தது.“ஓடையே! நீ ஐயே (-மெல்ல) ஓடு; என்னை விட்டு மெல்லப் பிரிந்துசென்று விட்ட என் தலைவனை நாடி நீயும் மெல்ல ஓடு” எனச் சொற்பொருள்பலவாக வந்தவாறு. (யா. வி. பக். 204, 191)