குறும்பூர்‌

குறும்பு என்பது பாலை நிலத்து ஊர்‌. இப்‌பெயர்‌ அடிப்படையில்‌ குறும்பூர்‌ என்ற ஊர்ப்‌ பெயர்‌ தோற்றம்‌ பெற்றதா என்பது தெரியவில்லை. விச்சியர்‌ கோமகன்‌ பகைவர்களுடன்‌ பொருத பொழுது குறும்பூர்‌ ஆர்த்தது என்று சங்க இலக்கியம்‌ கூறுகிறது.
“வில்‌ கெழுசானை விச்சயர்‌ பெருமகன்‌
வேந்தரொடு பொருத ஞான்றைப்‌ பாணர்‌
புலி நோக்குறழ்‌ நிலை கண்ட
கலிகெழு குறும்பூரார்ப்பினும்‌ பெரிதே (குறுந்‌. 3285 8)