குறுங்கோழியூர்‌

கிழார்‌ என்ற சங்க காலப்‌ புலவர்‌ குறுங்கோழியூரைச்‌ சேர்ந்தவர்‌. ஆகவே அவா்‌ குறுங்கோழியூர்‌ கிழார்‌ எனப்‌ பெயர்‌ பெற்றார்‌. செங்கற்பட்டு மாவட்டத்தைச்‌ சேர்ந்த மதுராந்தகம்‌ வட்டத்‌திலுள்ள கருங்குழியே அன்றைய குறுங்கோழியூர்‌ என்ற கருத்து உள்ளது. தொண்டை. நாட்டைச்‌ சேர்ந்த குறுங்கோழியூர்‌, குறுங்‌ கோழி என்று ஆச, இப்பொழுது கருங்குழி என வழங்கப்பெறு இறது என்பர்‌. (ரா. பி. சேதுப்பிள்ளை, ஊரும்‌ பேரும்‌ பக்‌. 11.) புறநானூற்றிலுள்ள 17, 20, 22 ஆகிய பாடல்கள்‌ குறுங்‌ கோழியூர்‌ கிழார்‌ பாடியவை.