குடி என்னும்சொல் ஊர் என்ற பொருளை குறிக்கும், வெகு தொலைவில் இல்லாமல் அருகில் குறுகிய தொலைவில் உள்ள ஊர் குறுங்குடி எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது, இவ்வூரினரான மருதன் என்ற சங்ககாலப் புலவர் குறுங்குடி மருதன் எனப்பெயர் பெற்றார். குறுந்தொகையில் 344ஆம் பாடலும், அகநானூற்றில் 4 ஆம் பாடலும் குறுங்குடி, மருதன் இயற்றியவை. பாண்டிநாட்டில் நெல்லை மாவட்டத்தில் குறுங்குடி என்று ஓர் ஊர் உள்ளது. திருமாலின் வாமனாவதாரத்தோடு தொடர்பு படுத்தி இவ்வூரின் பெயர் திருக்குறுங்குடி, என வந்ததாகப் புராணச் செய்தி கூறுகிறது,