திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளதொரு ஊர். திருமால் கோயில் சிறப்பு பெற்றது, பெரியாழ்வார், திருமழிசை ஆழ் வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பாடல்கள் பெற்ற தலம் இது. குறளன் தோன்றிய தலம் தான் குறுங்குடி. குறுகிய வடிவினனான வாமனன் பிறந்த குடியே குறுங்குடி என்றாகிறது. வாமன க்ஷேத்திரம் என்று பெயர் பெறுகிறது 1 என்ற எண்ணம் இவ்வூர் பற்றி அமைகிறது. எனினும் இவ்வூரில் வைணவக் கோயில் சிறப்பு பெற்ற பின்பு ஏற்பட்ட புராணக் கதை மூலம் இப்பெயர் பெற்றது இவ்வூர் என்பதை விட, குறுகிய அல்லது சிறிய குடியிருப்பு பகுதி என்று நிலையில் இப்பெயர் அமைந்ததாக இருக்கலாம் என்பது மேலும் ஆய்வுக்குரியது.
கரண்டமாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும்பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி – திருமழி -813
கோலமயில் பயிலும் புறவில் குறுங்குடி – (திருமங் -1790)
சிரமுன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன்
உரமும் கரமும் துணித்த வுரவோன் ஊர்போலும்
இரவும் பகலும் ஈன் தேன் முரல, மன்றெல்லாம்
குரலின் பூவே தான் மணம் நாறும் குறுங்குடியே – திருமங் -1801
குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி – நம் – 2393