செய்யுள் விகாரம் ஆறனுள் ஒன்று. செய்யுட்கண் தளை சிதையாமை வேண்டி
நெட்டெழுத்துக் குறுகுவது குறுக்கல் விகாரமாம். எ-டு : ‘திருத்தார்நன்
றென்றேன் தியேன்’
‘தீயேன்’ எனற்பாலது இயற்சீர்வெண்டளை பிழையாமைப் பொருட்டாகத்
‘தியேன்’ என நெடில் குறுகி நின்றது. (நன்.155)