எழுத்துத் தன்மாத்திரையின் குறுகியொலித்தல்.ஐகாரஒளகாரங்கள் சொல்லின்கண் முதலில் நின்றவழி ஒன்றரைமாத்திரையாகவும், ஐகாரம் சொல்லின்கண் இடைகடைகளில் நின்றவழி ஒருமாத்திரையாகவும்,ஒரு மாத்திரை பெறும் இகர உகரங்கள் இடமும் பற்றுக் கோடும் காரணமாகச்சில விடங்களில் அரைமாத்திரையாக வும், அரை மாத்திரை பெறும் ஆய்தம்புணர்ச்சி வகையால் (சிலவிடத்தே லள மெய் திரிதலால் வரும் ஆய்தம்) கால்மாத்திரையாகவும், அரை மாத்திரை பெறும் மகரம் இட வகையால் சிலவிடத்தேகால் மாத்திரையாகவும் குறுகிவரும். (யா. கா. 4)