குறுகிய ஐ இணைந்த நிரையசை

சீர்க்கு இடையும் இறுதியும் நின்ற ஐகாரம் ஐகாரத்தோடு இணைந்தும்நிரையசையாம். ஆகவே முதற்கண் ஐகாரம் பிறிதோரெழுத்தோடு இணைந்துநிரையசையாகாது.‘கெண் டையை வென்ற கிளரொளி உண்கண்ணாள்’கெண்டையை – சீர்க்கடைக் கண் ஐகாரம் இரண்டிணைந்து நிரையசைஆயிற்று.‘அன் னையை யான் நோவ தவமால் அணியிழாய்’அன்னையையான் – சீரிடைக்கண் ஐகாரம் இரண்டிணைந்து நிரையசைஆயிற்று.‘படு மழைத் தண்மலை வெற்பன் உறையும்’சீர்க்கடைக்கண் ஐகாரம் குற்றெழுத்தோடு இணைந்துநிரையசையாயிற்று.‘தன் னைய ருங் காணத் தளர்ந்து’சீர் இடைக்கண் ஐகாரம் குற்றெழுத்தோடு இணைந்து நிரையசை ஆயிற்று.(யா. க. 9 உரை)