சூத்திரவகை ஆறனுள் இவை சில. குறியாவன இவை உயிர், இவை ஒற்று, இவை
பெயர், இவை வினை என்றல் தொடக்கத்து அறிதல்மாத்திரையாய் வருவன. குறி
என்பது அறிதலை உணர்த்திய முதனிலைத் தொழிற்பெயர். செய்கை யாவன பதம்
முன் விகுதியும் பதமும் உருபும் புணரும் புணர்ச்சி விதி அறிந்து,
அங்ஙனம் அறிதல் மாத்திரையாய் நில்லாது அவ்வாறு வேண்டுழிப்
புணர்த்தலைச் செய்தலும், பெயரும் வினையும் கொள்ளும் முடிபு விதி
அறிந்து அங்ஙனம் அறிதல் மாத்திரையாய் நில்லாது அவ்வாறு வேண்டுழி
முடித்தலைச் செய்தலும் முதலியன. (நன். 20 சங்கர.)