குறில்

அ இ உ எ ஒ என்ற ஐந்தும் ஒரு மாத்திரையே பெறும்
உயிர்க்குற்றெழுத்தாம். இவை 18 மெய்கள்மீது ஏறவே அமையும் (18
X 5 =) 90 எழுத்துக்களும்
உயிர்மெய்க் குற்றெழுத்தாம். குறிலுக்கு மாத்திரை ஒன்று. (நன். 64,
87)