குறிலிணை, குறில்நெடில் முன்னர் ஒற்றுமெய் கெடுதல்

குறில் மாத்திரை நீண்டு நெடிலாகும். ஆகவே, குறில் நெடில் என்பன
மாத்திரைகொண்டு வெவ்வேறு பெயர் பெற்றன. இருகுறில் இணைந்து இரண்டு
மாத்திரை கொண்டனவும், குறில் நெடில் இணைந்து மூன்று மாத்திரை
கொண்டனவும், இரண்டு மாத்திரை அளவிற்றாய நெடில்போல, வரு மொழிக் கண் த்
ந் வரின், நிலைமொழியீற்றிலுள்ள ல் ள் – என்ற மெய்கள் கெடும். (வருமொழி
முதலிலுள்ள தகரம் றகரமாக வும் டகரமாகவும் திரியும்; நகரம் னகர
ணகரங்களாகத் திரியும்.)
எ-டு : கோள் + தீது = கோடீது; விரல் + தீது = விரறீது; வரால் +
தீது = வராறீது; கோள் + நிமிர்ந்தது = கோணி மிர்ந்தது; விரல் +
நிமிர்ந்தது = விரனிமிர்ந்தது; வரால் + நிமிர்ந்தது =
வரானிமிர்ந்தது;
தொல். நெடில்முன் ஒற்றுக் கெடற்கே விதி கூறி, குறிலிணை முன்னரும்
குறில்நெடில் முன்னரும் ஒற்றுக் கெடற்கு விதி கூறாது, போந்த பொருளால்
கொள்வித்தார். (தொ. எ. 50 இள. உரை)