குறிலிணை உகரம்

குற்றெழுத்தோடு இணைந்த குற்றியலுகரமும் முற்றியலுகர மும் என்பதுஇத்தொடர்ப்பொருள். தனிக்குறிலை அடுத்துக் குற்றியலுகரம் வாராதாகவே,சொல்லின் தொடக்கத்தே பிற எழுத்துக்கள் இருப்ப அடுத்து வந்தகுற்றெழுத்தினை அடுத்த குற்றியலுகரம் என்றே பொருள் கோடல்வேண்டும்.‘குற்றெழுத்தோடு இணைந்த குற்றியலுகரம் – ஞாயிறு, வலியது2. குற்றெழுத்தோடு இணைந்த முற்றியலுகரம் – கரு, மழு.ஞாயிறு, வலியது என்பன முறையே நெடிலையும் குறிலிணை யையும் அடுத்தகுற்றெழுத்தைச் சார்ந்த குற்றியலுகரம். இவற்றை முறையே நேர் நேர்பு,நிரை நேர்பு என்று கோடல் கூடாது; நேர்நிரை, நிரைநிரை என்றே கோடல்வேண்டும்.கரு, மழு – ஆகிய தனிக்குறிலை அடுத்த முற்றியலுகரங்களும், நேர்புஅசை ஆகாது, நிரையசையாகவே கொள்ளப்பெறும். (தொ. செய். 5 நச்.)