குறியதன் கீழ் ஆ

தனிக்குறிலை அடுத்த ஆகாரஈற்றுப் பெயர் குறுகுதலும், அதனோடு உகரம்
ஏற்றலும், இயல்பாகவே ஆகாரஈறாய் வருதலும் என்ற மூன்று நிலையும்
செய்யுட்கு உரிய.
எ-டு : நிலா, நில, நிலவு; பலா, பல, பலவு;
சுறா, சுற, சுறவு; கனா, கன, கனவு
‘நி
லா வணங்கு’ எனவும், ‘நில விரி
கானல்’ எனவும், ‘என் செய்யுமோ நிலவு’ எனவும் செய்யுட்கண் வருமாறு
காண்க. (நன். 172)