எழுத்து முடிந்த வகையானும் சொல் தொடர்ந்த வகை யானும் சொற்கண்அமைந்துள்ள பொருளானும் செவ்வனே பொருள் அறிதற்கு அரிதாகிப்பொருட்புறத்த பொரு ளுடைத்தாய் நிற்பது. (தொல். செய். 179 நச்.,பேரா.)எ-டு : ‘குடத்தலையர் செவ்வாயில் கொம்பெழுந்தார் கையின்அடக்கிய மூக்கினர் தாம்’.“குடம் போலும் தலையராய், செவ்வாயிடைக் கொம்புகள் தோன்றினராய்,கையின்கண் அடக்கிய மூக்கினையுடை யார்” என்ற இஃது யானை என்பதனைஉணர்த்தியமை குறிப்பு மொழியாம். குறிப்புமொழி அடிவரையறைப் படாமையின்பாட்டின்கண் வாராது என்பது. (தொ. செய். 179 நச்.)இனி, இலக்கண விளக்கம் கூறுமாறு :எழுத்தாலும் சொல்லாலும் தெரிவிக்காமல் பொருட்கண் அபிநயத்தில்கிடப்பனவே குறிப்புமொழி.‘ஒருமுகம், எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்திங்கள் போலத் திசைவிளக் கும்மே’ (முருகு. 97, 98)என்று கூறிய திருமுகத்துக்கு ஏற்ப,‘ஒருகை மார்பொடு விளங்க’ (முருகு. 112)எனக் குறிப்புமொழி உட்கொண்டு கூறியவாறு.‘குடத்தலையர் …. மூக்கினராம்’ என்பது பாட்டிடை வைத்தகுறிப்பினுள் அடங்கும். (இ. வி. பாட். 147 உரை)