குறிப்புமொழிச் செய்யுள்

அடிவரையறை இல்லாத செய்யுள் வகை ஆறனுள் குறிப்பு மொழிச்செய்யுளும்ஒன்று. எழுத்து முடிந்தவாற்றானும், சொல் தொடர்ந்தவாற்றானும்,சொற்படுபொருளானும், செவ்வன் பொருள் அறியலாகாமையின், எழுத்தொடும்சொல்லொடும் புணராது பொருட்புறத்தே பொருளுடைய தாயிருப்பதுகுறிப்புமொழியாம்.இது கவியை வாசித்த மாத்திரத்தில் பொருள் தோன்றாது, பின்னர் இன்னதுஇது என்று சொல்லி உணர்த்தப்படுவ தாம்.எ-டு : ‘குடத்தலையர் செவ்வாயில் கொம்பெழுந்தார் கையில்அடக்கிய மூக்கின ராம்’.இதனைக் குறித்து உணர்ந்து யானை என்று பொருள் செய்க. இது பாட்டுவடிவில் அமைந்தமையின் விடுகதையாகிய பிசி எனப்படாது. நேரிதாகப் பொருள்உணர்த்தல் ஆற்றாமை யின் பாட்டெனப்படாது. இதற்கு அடிவரையறை இல்லை. ஓரடிமுதலா எத்தனை அடி அளவினதாகவும் இக்குறிப்பு மொழிச் செய்யுள் அமையலாம்.(தொ. பொ. 179 பேரா.)சொல்லால் பொருள் உணர்த்தலேயன்றிப் பொருளானும் சொல் பெறப்படச்செய்யும் எழுத்தினொடும் சொல்லி னொடும் புணராதாகிப் பொருட்கண்அபிநயத்தில் கிடப்பனவே குறிப்புச் சொல்லாம். அதுஎஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்திங்கள் போலத் திசைவிளக் கும்மே’ (முருகு. 97, 98)என்று கூறிய திருமுகத்தினுக்கு ஏற்ப,‘ஒருகை மார்பொடு விளங்க’ (முருகு. 112)எனக் குறிப்புமொழி உட்கொண்டு கூறியவாற்றான் உணர்க.‘குடத்தலையர்… மூக்கினராம்’ என்பது பாட்டிடை வைத்த குறிப்பினுள்அடங்கும். (இ.வி. பாட். 147 உரை)