குறிப்பிசை மாத்திரை ஆகாமை

செய்யுள் உறுப்பு இருபதாறனுள் முதலாவதாகிய மாத்திரை என்பதுஎழுத்தல்லாத ஓசையாகிய குறிப்பிசையைக் குறிக்கும் என்பர்ஒருசாரார்.அக்குறிப்பிசை உறுப்பாக வரும் சான்றோர் செய்யுள் இன்மையின்,மாத்திரை என்ற சொல் குறிப்பிசையைக் குறிப்பது ஆகாது. சிறுபான்மைபிற்காலச் செய்யுட்களில் குறிப்பிசை ஒரோவழி வரினும், அத்துணையானே அஃதுஇன்றியமையாத செய்யுள் உறுப்புக்களுள் தலையாயதாய் எண்ணப்படாதாகலின்,மாத்திரை என்பதற்கு எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால அளவு என்பதேபொருள். (தொ. செய். 2 பேரா.)