குறித்த பொருளை முடிய நாட்டல்

தான் வைப்பக் கருதிய பொருளைப் பிறிதோர் அடியும் கொண்டு கூட்டாதுஅமைந்துமாறச் செய்தல்.எ-டு :‘நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்’ ஆசிரியம்‘துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டு’(நாலடி.2)(வெண்பா)‘அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்’ (கலி.11) -(கலிப்பா)‘வசையில்புகழ் வயங்குவெண்மீன்’ (பட்-1) – வஞ்சிப்பாஇந்நால்வகைச் செய்யுட்கண் முடியும்துணையும் அடிதோறும் குறித்தபொருளை முடிய நாட்டியவாறு. (தொ. செய். 78 நச்.)