நவநீதப்பாட்டியல் கூறும் குறவஞ்சியிலக்கணம் வீரமாமுனி வரது சதுரஅகராதியுள் குறத்திப்பாட்டின் இலக்கணமாகக் காணப்படுகிறது.தலைவன் பவனிவரவு, மகளிர் காமுறுதல், மோகினிவரவு, உலாப்போந்ததலைவனைக் கண்டு மயங்கல், திங்கள், தென்றல் முதலிய உவாலம்பனம், பாங்கி,“உற்றது என்?” என வினவல், தலைவி பாங்கியோடு உற்றது கூறல், பாங்கிதலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவிபாங்கியைத் தூதுவேண்டல், தலைவி பாங்கியொடு தலைவன் அடையாளம் கூறல்,குறத்தி வரவு, தலைவி குறத்தியை மலைவளம் முதலிய வினவல், குறத்திமலைவளம் நாட்டுவளம் முதலிய கூறல், தலைவனுடைய தலவளம் கிளைவளம் முதலியகூறல், குறிசொல்லி வந்தமை கூறல், தலைவி குறத்தியை வினவல், குறத்திதெய்வம் பராவல், குறிதேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசில் உதவிவிடுத்தல், குறவன் வரவு, புள்வரவு கூறல், கண்ணி குத்தல்,புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத் தேடல், குறவன் பாங்கனொடுகுறத்தி அடையாளம் கூறல், குறத்தியைக் கண்ணுறல், குறவன் அணி முதலியகண்டு ஐயுற்று வினவலும் ஆட்டாண்டு குறத்தி விடைகூறலுமாகக் கூறல் -எனப் பெரும்பான்மையும் இவ்வகை உறுப்புக்களால், அகவல் வெண்பாதரவுகொச்சகம் கலித் துறை கலிவிருத்தம் கழிநெடில் விருத்தம் என்றஇச்செய்யுள் இடையிடைக் கூறிச் சிந்து முதலிய நாடகத் தமிழால் நிகழும்பிரபந்தவகை. (நவ. பாட். 20-22)