இது குறள்வெண்பாவின் இனம்; தம்முள் ஒத்த இரண் டடிகள் விழுமியபொருளும் ஒழுகிய ஓசையும் உடையன வாய் வருவது. ஒவ்வோரடியும் நாற்சீர்முதல் பல சீர்களானும் வரும்.எ-டு : ‘கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே’.இது நாற்சீரடி இரண்டான் ஆகியது.‘நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள்கொன்று தின்னு மாந்தர்கள் குடிலம் செய்து கொள்ளாரே’.இஃது அறுசீரடி இரண்டான் ஆகியது. (யா. க. 63)