மகரக்குறுக்கம். லகர ளகர மெய்கள் திரிந்த னகர ணகரங்களின் முன்
வரும் மகரம், தன் அரைமாத்திரையிற் குறுகிக் கால் மாத்திரையாய் ஒரு
மொழி இறுதிக்கண் வரும். நிலைமொழி மகரஈற்று வினையாக நிற்க, வருமொழி
முதற்கண் வகரம் நிகழுமாயின், நிலைமொழியீற்று மகரம் குறுகிக் கால்
மாத்திரையாய் இருமொழிக்கண் வரும். இவ்வாறு இட வகையால் மகரக் குறுக்கம்
மூன்றாம்.
வருமாறு : போலும்
> போல்ம்
> போன்ம், மருளும்
> மருள்ம்
> மருண்ம் – ஒருமொழி
மகரக்குறுக்கம்
தரும் வளவன் – இருமொழி மகரக்குறுக்கம். (நன். 96)