குறள் தாழிசை

தாழிசைக் குறள் எனவும்படும்; குறள்வெண்பாவின் இனங் களுள் ஒன்று;இரண்டடிகளான் அமையும். இது மூவகைப் படும்:1. விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையுமின்றி வெண் செந்துறை போலச் சமமானஈரடிகளான் அமைவது.எ-டு : ‘திடுதிம் மெனாநின் றுமுழா அதிரப்படிதம் பயில்கூத் தருமார்த் தனரே’.2. இரண்டடியாய் அமைந்து ஈற்றடி சிலசீர்கள் குறைந்து வருவது.எ-டு : ‘நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாயஞானநற்கண்ணினான் அடியே அடைவார்கள் கற்றவரே’.3. தளை வழுவி வரும் குறள் வெண்பா.எ-டு : ‘வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்பண்டையள் அல்லள் படி’இக்குறள்வெண்பா மூன்றாம் நான்காம் சீர்களிடைக் கலித்தளை தட்டுவந்தது. (யா. க. 64, 65 உரை)