1. குறள் ஆமாறு – குறள் காண்க2. அடியிரண்டாய்த் தம்முள் அளவொத்தது சிந்தாம்.எ-டு. :‘வீசின பம்பர மோய்வதன் முன்னான்ஆசை யறவிளை யாடித் திரிவனே’ எனவும்,‘எடுத்த மாட மிடிவதன் முன்னான்அடுத்த வண்ணம் விளையாடித் திரிவனே’ எனவும் வரும்.3. மூன்றடியாய்த் தம்மில் அளவொக்கில் திரிபாதியாம்.எ-டு : ‘மடிந்து வாழ்நாட் போக்கன்மின், மாந்தர்காள்!இடிந்திவ் யாக்கை இழிவதன் முன்னநீர்,தடிந்து தீவினை, தன்மம் செய்மினே’(புனைந்தது)4. நான்கடியாய்ப் பதினைந்து சீராய் நடுவு தனிச்சொல் வருவதுவெண்பாவாம். முதற்சீரும் ஐந்தாம்சீரும் எட்டாம் சீரும் ஒத்தஎதுகையாய், ஒன்பதாம் சீரும் பதின்மூன்றாம் சீரும் ஒத்த எதுகையாய்ப்பதினைந்து சீரால் வந்தது வெண்பாவாம். இதனை நேரிசை வெண்பாஎன்பாருமுளர்.எ-டு : ‘ஒன்றைந்தெட் டாகியசீர் ஒத்த எதுகையாய்நின்றபதின் மூன்றொன்பான் நேரொத்து – நன்றியலும்நீடுசீர் மூவைந்தான் நேரிசைவெண் பாஎன்பர்நாடுசீர் நாப்புலவர் நன்கு.’இன்னிசை வெண்பாவினை இந்நூலுரையாசிரியர் வெண் பாப் போலியுள்அடக்குவர். (வீ. சோ. 127 உரை)