குறள்வெண்பாவின் நான்கு ஆறு அமைப்பு

இறுதிச்சீர் நேர், நிரை, நேர்பு, நிரைபு என முடியுமாற்றான்குறள்வெண்பா நான்காம். இனி, முற்றுகர ஈற்று நேர்நேர், முற்றுகர ஈற்றுநிரைநேர் – எனும் இவற்றான் இறுதலைக் கூட்ட ஆறும் ஆம்.எ-டு :‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயி றூறிய நீர்’ (குறள் 1121)நன்றறி வாரின் கயவர் திருவுடையார்நெஞ்சத் தவல மிலர்’ (குறள் 1072)‘கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு’ (குறள் 984)‘அகர முதல எழுத்தெல்லா மாதிபகவன் முதற்றே உலகு’ (குறள் 1)எனவும்,‘இன்மலர்க் கோதாய் இலங்குசீர்ச் சேர்ப்பன்புனைமலர்த் தாரகலம் புல்லு’ (யா. கா. மேற்.)‘மஞ்சுசூழ் சோலை மலைநாட! மூத்தாலும்அஞ்சொல் மடவார்க் கருளு’ (யா. கா. மேற்)எனவும் முறையே அவை வந்தவற்றால் குறள் வெண்பாவின் இறுதிச்சீர்அமைப்பு நான்காகவும் ஆறாகவும் கொள்ளப் படும். (இ. வி. 728 உரை)