குறளடி வஞ்சி

நான்கு எழுத்து முதல் பன்னிரண்டு எழுத்து முடிய ஒன்பது நிலத்தினும்முறையான் ஓங்கி வரும் இருசீரடி.எ-டு :‘கல்சேர்ந்து கல்தோன்று’ – 4 எழுத்தடி‘தண்பால் வெண்கல்லின்’ – 5 எழுத்தடி‘கண்டுதண்டாக் கட்கின்பத்(து)’ – 6 எழுத்தடி‘காழ்வரக் கதம்பேணா’ – 7 எழுத்தடி‘தாழிரும் பிணர்த்தடக்கை’ – 8 எழுத்தடி‘நிலனெளியத் தொகுபீண்டி’ – 9 எழுத்தடி‘அகன்ஞாலம் நிலைதுளங்கினும்’ – 10 எழுத்தடி‘தாள்களங்கொளக் கழல்பறைந்தன’ (புறநா. 4) – 11 எழுத்தடி‘குருகிரிதலின் கிளிகடியினர்’ – 12எழுத்தடிஎழுத்தெண்ணுமிடத்தே மெய்யெழுத்துக்களும் ஆய்தமும் குற்றியலுக ரமும்குற்றியலிகரமும் தள்ளுண்டு போம்.(யா. வி. பக். 500)