குறளடியால் மூன்றுமுதற் பல அடிகொண்டு, அடுத்துத் தனிச்சொல் பெற்றுஅடுத்து ஆசிரியச்சுரிதகத்தான் இறுவது.எ-டு :பூந்தாமரைப் போதலமரத்தேம்புனலிடை மீன்திரிதரவளவயலிடைக் களவயின்மகிழ்வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்மனைச்சிலம்பிய மணமுரசொலிவயற்கம்பலைக் கயலார்ப்பவும்நாளும்,மகிழும் மகிழ்தூங் கூரன்புகழ்த லானாப் பெருவண் மையனே’ (யா. க. 90 உரை)