குறட்போலி

எழுசீரின் மிக்கும் குறைந்தும் இரண்டடியாய், அவ்வடியும் தம்முள்அளவொவ்வாது வருவது; ஓரடியாலே ஒரு செய்யுளாய் வருவதும்குறட்போலியாம்.எ-டு : ‘உற்றவர்க்குறுப் பறுத்தெரியின்க ணுய்த்தலையன்னதீமைசெய்தோர்க்கும் ஒத்த மனத்தராய்நற்றவர்க்கிட மாகிநின்றது நாகையே’இஃது இரண்டடியாய் ஈறு குறைந்து வந்த குறட்போலி.‘சிறியகுறள் மாணி செய்குணங்கள்ஓதுவன்காண்’இஃது ஓரடியான் வந்த குறட்போலி (வீ. சோ. 127 உரை)