குருவும் லகுவும்

தனிநெட்டெழுத்தும் ஒற்றடுத்த நெட்டெழுத்தும், ஒற்றடுத்தகுற்றெழுத்தும் ‘குரு’. இஃது ஈரலகு பெறும். இது டகர வடிவிற்று.தனிக்குற்றெழுத்து ‘லகு’. இதற்கு ஓர் அலகு. இது ரகர வடிவிற்று.அடியிறுதிக்கண் வரும் தனிக்குறில் ஒருகால் கூறுமாற்றான் குருவாகஒலிக்கப்பட்டு ஈரலகும் பெறும். (யா. க. 95. உரை)